சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வீடியோவில், வீட்டின் முற்றத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையை ஒரு காளை திடீரென தாக்கும் சோகமான காட்சி பதிவாகியுள்ளது. கொம்புகளால் குழந்தையை நசுக்கும் அந்தக் காட்சி, பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையிலும், குழந்தை அனுபவிக்கும் வலி கண்களில் தெரியும் அளவிலும் உள்ளது. மேலும், தாக்கிய பின் அந்தக் காளை அந்தக் குழந்தையின் மேல் அமர்ந்து அதனை விடாமல் அழுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடியான வீடியோவில், முதலில் குழந்தை தனியாக நின்று கொண்டிருக்க, திடீரென காளை ஓடி வந்து தாக்குகிறது. அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லை. சில விநாடிகள் கழித்து, ஒரு நபர் ஓடி வந்து, குழந்தையை காளையின் கீழ் இருந்து வெளியே எடுப்பது தெரிகிறது. பின்னர் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு இளைஞனும் உதவிக்கரம் நீட்டுகிறார். காளை, தாக்கிய பின் அமைதியாக அந்தக் குழந்தையின் மேல் அமர்ந்திருப்பது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. இது பார்ப்பவர்களில் பரிதாபம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று செல்லப்பிராணிகள் அல்லது விலங்குகளை கட்டுப்பாடின்றி வெளியே விடுவதால் குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள், இந்தக் காணொளியைப் பார்த்தவுடன் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். “குழந்தையை ஒருபோதும் தனியாக விட்டுவிடக்கூடாது” என்றும், “செல்லப்பிராணிகளை வளர்க்கும் நபர்கள் அவற்றை கட்டி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் விட கூடாது” என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.