நவராத்திரி 2025 கொண்டாட்டம் ஆரம்பிச்சு, இந்தியா முழுக்க தெருக்களில் கர்பா நடனமும், தாண்டியா தாளமும், வண்ணமயமான உற்சவங்களும் களைகட்டுது. ஆனா, இந்த வருஷம் மனுஷங்களோடு சேர்ந்து ஒரு குட்டி நாய்க்குட்டியும் கர்பாவில் கலக்குது. ஒரு ஷிஹ் ட்ஸு நாய்க்குட்டி, பாரம்பரிய கர்பா உடையில் அழகா உடை உடுத்தி, நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கெடுத்த நிகழ்வு  இணையத்தில் வைரலாகுது.

இன்ஸ்டாகிராமில் புல்கித் அகர்வால் பகிர்ந்த இந்த அழகான வீடியோவில், இந்த நாய்க்குட்டி மத்த நாய்களோடு சேர்ந்து, கர்பா உடையில் மின்னுது. அதன் உரிமையாளர் அந்த குட்டி நாயை கையில் தூக்கி, அன்போடு கர்பா ஆடுற காட்சி இதயத்தை கொள்ளைகொள்ளுது. “இது பாவ்ராத்திரி ”னு  இந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Pulkit Agrawal👻 (@iampulkitt)

இந்த வீடியோ இணையவாசிகளை உருக வைத்துள்ளது. ஒருவர், “எல்லா பாவ்ர்லிங்குக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!  மா எல்லா சந்தோஷத்தையும் தரட்டும்”னு கமெண்ட் பண்ணியுள்ளார். இன்னொருவர், “நாய்களுக்கு பயப்படுறவன் நான், ஆனா இந்த குட்டி நாய் நவராத்திரி உடையில் க்யூட்டா இருக்கு ”னு சொல்லி ரசித்துள்ளார்.

“அடடா, எவ்ளோ அழகு!”னு ஒருத்தர் உருக, இன்னொருத்தர், “நாய்க்குட்டிகளோட உணர்வும் செம வைப்ல இருக்கு”னு சிரிச்சிருக்கார். ஆனா, ஒரு நெட்டிசன், “நல்ல முயற்சி, ஆனா இந்த வீடியோவில் ஒரு இந்திய நாய் கூட இல்லைனு வருத்தமா இருக்கு அவங்களுக்கும் வீடு, அன்பு, பாசம் வேணும். வாங்காம, தத்தெடுங்க”னு வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Father_son_duo (@asher_husky_)

இந்த நவராத்திரி, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடக்குது, விஜயதசமி அக்டோபர் 2-ல் கொண்டாடப்படுது.  துர்கையின் ஒன்பது வடிவங்களை வணங்கி, ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பரப்புற இந்த நவராத்திரி, விலங்குகளையும் உற்சாகத்தில் இணைச்சிருக்கு.