இன்ஸ்டாகிராம் படைப்பாளியும் இசைக் கலைஞருமான பிரியங்கா பராஷர், தனது பெற்றோரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி மனம் திறந்து பேசிய வீடியோ, கோடிக்கணக்கான இதயங்களை தொட்டுள்ளது. தனது பெற்றோர் இருவரும் பார்வையற்றவர்கள் என்பதை இதுவரை பகிரங்கமாக பேசாத பிரியங்கா, அவர்களது கஷ்டங்களையும், தன்னை வளர்த்த விதத்தையும் உருக்கமாக விவரித்து உள்ளார்.

“ஒரு கையில் கைத்தடியும், மறு கையில் என்னையும் பிடிச்சு வளர்த்தாங்க”னு அவர் சொல்லும்போது, அவரது பெற்றோர் எதிர்கொண்ட சவால்கள் நெஞ்சை பிசையுது. பிரியங்காவுக்கு நல்ல கல்வி கிடைக்கணும்னு, பெற்றோர் நகரங்களை மாறி, அலுவலகப் பணிகளையும், வீட்டு வேலைகளையும் சமாளிச்சு, அவரை உருவாக்கி உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Parashar (@melodiesofpriyanka)

குறிப்பா, அவர் அப்பா, பிசியான நேரத்திலும் இசையைக் கத்து கொடுத்து, பிரியங்காவோட இசைப் பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளார். அம்மாவோ, வேலைக்குப் போய்க்கொண்டே வீட்டு பொறுப்புகளை ஏற்று, குடும்பத்தை தாங்கினாங்க.

பிரியங்கா பிறப்பதற்கு முன்னாடியே, அவரது பெற்றோருக்கு வழிகாட்டியாக இருந்தவங்க அவங்க குருக்கள். அந்த நன்றிக் கடனை மறக்காம, பிரியங்கா தனது பெற்றோரை அவங்க குருக்களை சந்திக்க அலும்னி சந்திப்புக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த உணர்ச்சிமயமான மீண்டும் சந்திப்பு, வீடியோவில் பதிவாகி, இணையத்தில் 45 லட்சத்துக்கும் மேலான பார்வைகளைப் பெற்றுள்ளது. “இந்த குடும்பத்துக்கு ஆயுளும் ஆரோக்கியமும் அள்ளித் தரட்டும்”னு ஒரு நெட்டிசன் வாழ்த்த, “உங்க பெற்றோர் உன்னை வளர்த்த விதம் அபாரம், மரியாதைகள்!”னு இன்னொருத்தர் புகழ்ந்துள்ளார்.

“இது இன்ஸ்டாகிராமோட பிரீமியம் பக்கம், உங்க பெற்றோர் பாராட்டப்பட வேண்டியவங்க”னு மற்றொரு கமெண்ட். பிரியங்காவோட இந்த கதை, விடாமுயற்சி, அன்பு, குடும்பத்தின் பலத்தை உணர்த்தி, எல்லோர் மனசையும் கண்கலங்க வச்சிருக்கு.