தற்போது சமூக வலைதளங்களில் ஒரு திருமணத்திற்கு முந்தைய (Pre-Wedding) வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.இந்த காணொளியில், சாய் சல்கோன்கர் மற்றும் அகன்க்ஷா லகோர்கர் என்ற காதல் ஜோடி, கடற்கரையில் காதலான தருணங்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒரு திடீர் சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
வீடியோவில், அகன்க்ஷா ஓடி வர, சாய் தனது கைகளில் அவளை தூக்கி திருப்பும் தருணத்தில், இருவரும் சமநிலையை இழந்து பாறையிலே விழுகிறார்கள். இந்தக் காட்சி எதிர்பாராத விதமாக நடந்ததாலும், அதிர்ச்சிக்குரியதுமாகவும் அமைந்தது.
இருப்பினும், இந்த வீடியோவின் பின்னணியில் ‘WWE’ போல் இசையை சேர்த்த தம்பதிகள், அதை நகைச்சுவையுடனும் விளையாட்டுத்தனத்துடனும் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி, 6 நாள்களில் சுமார் 1 கோடி பார்வைகளைத் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
சமூக வலைதளங்களில் பலரும் “அந்த பையன் காதலில் விழுவதற்கு முன் கடற்கரையில் விழுந்தார்” என்றகட்டுரைகளோடு கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் இந்த சம்பவத்தில் அவர்கள் காயமடைந்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவர்களின் உடல்நிலையைப் பற்றியும் கவலை வெளியிட்டுள்ளனர். இது போன்ற பதிவுகள், இன்றைய சமூக ஊடக கலாச்சாரத்தில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சியை ஒன்றாகக் கலந்துரைக்கின்றன.
