தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.