தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் கண்டறியப்படாத நடுகல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வீரனின் உருவம், அதன் கொண்டை அமைப்பு நேராக இருப்பதால் இந்த நடுகல் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

அருகில் இருக்கும் பெண்ணின் முகம் வீரனை நோக்கி இருக்கிறது. இந்த நடுகல்லில் இடம் பெற்றிருக்கும் நபர் உள்ளூர் தலைவராகவோ அல்லது சிறிய அளவிலான பகுதியை ஆளக்கூடிய இனக்குழு தலைவராகவோ இருந்திருக்கலாம். இந்த வீரன் உயிரிழந்த உடன் அவரது மனைவியும் சிதையில் விழுந்து உயிரை விட்டிருக்க கூடும் என கூறியுள்ளார்.