கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டதில் ஒடிசாவில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து ஆராய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா சென்றனர்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஆகியோர் சென்னைக்கு திரும்பியுள்ளனர். சென்னை திரும்பி அமைச்சர் உதயநிதி ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்க வில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் உதயநிதி மற்றும் சிவசங்கர் ஆகியோர் சந்தித்துள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள், பயணிகள் சென்னை திரும்புவதற்கு மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து  முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.