செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டணி வைப்பதற்கு ஒத்த கருத்துள்ள கட்சி எங்கயாவது இருக்குதா ? கேக்குறாங்க… கேட்டாங்க… உங்கள மாதிரி ஒரு செய்தியாளர் கேக்குறாங்க. ஒத்த கருத்துள்ள கட்சி கூட்டணிக்கு வந்தா சேர்த்துக்கொள்வீர்களா என்று ?  வரும்போது பார்ப்போம்.

உங்களுக்கு இன்னைக்கு கூட்டணிங்கிறது காசு கொடுத்து தான் வெல்ல முடியும் என்று கட்சி முடிவு பண்ணிட்டதால…  மற்ற கட்சிகள் அவங்களோட போய் நின்னா…  நமக்கு ரெண்டு, மூன்று சீட்டு கொடுத்தாலும், வெற்றி பெற  வச்சிருவாங்க. பணத்தை கொடுத்து என  நினைக்கிறாங்க…  நம்ம அது மாதிரி செய்ய முடியாது. அதனால அதுக்கு ஒரு காலம் இருக்கு. ரொம்ப நாள் அதுக்கு காத்திருக்கணும்.

10, 15 விழுக்காட்டுக்கு மேல நம்ம வாக்கு விழுக்காடு ஏறனும். அப்போ இவரு வென்றுவாருன்னு நம்பிக்கை மத்த கட்சிக்கு வரணும். அப்படித்தான் வருவாங்க. அப்படித்தானே ஐயா விஜயகாந்த் கிட்ட போனாங்க. உங்களுக்கு தெரியும்…  மக்கள் நல கூட்டணின்னு ஒன்னு ஆரம்பிச்சு. அவர் பத்து விழுக்காடு தொட்டு இருந்தாரு. நம்ம ஏழுல இருக்கோம். அதை தாண்டி வேகமா போனும். அதுக்கு அப்புறம் தான் கூட்டணி கட்சி எங்களை தேடி வருவது நடக்கும் என தெரிவித்தார்.