இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் காசாவில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் மேற்கு முனையில் அல்சக்ரா என்ற மசூதி உள்ளது. இங்கு கமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த மசூதியை குறி வைத்து ஏவுகணை வீசியதோடு, ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் இந்த தகவல் அரபு நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.