இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998 ஆம் ஆண்டு நாசாவில் இணைந்தார். இவர் கடந்த 2006 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இரு முறை வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பினார். இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி செல்ல இருக்கிறார் என்று நாசா அறிவித்தது.

அதன்படி கடந்த 7-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி செல்வதாக இருந்த நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி செல்ல இருப்பதாக தற்போது நாசா அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 1ஆம் தேதி பகல் 12.25 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் செல்கிறார். மேலும் இதற்கு பதிலாக ஜூன் 2, 5,6 ஆகிய மாற்று தேதிகளையும் நாசா அறிவித்துள்ளது.