இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அனைத்து சிறிய சிறிய செயல்களிலும் கூட செல்போனை பயன்படுத்துகின்றனர். ஒரு குழந்தை சாப்பிடுவதற்கு கூட கையில் செல்போனை கொடுத்துவிட்டு தான் சாப்பாடு ஊட்டும் சூழல் இன்று உருவாகிவிட்டது. இந்த நிலையில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உளவியல் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துப்பாக்கியை வைத்து சுடுதல் போன்ற விளையாட்டுகளை செல்போனில் குழந்தைகள் அதிகம் விளையாடுகின்றனர். இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கின்றது. உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இது வழி வகுக்கக் கூடும். யாருடனும் பழகாமல் செல்போனுக்கு அடிமையாவது என்பது ஆபத்து. இது போன்ற கேம்களை குழந்தைகள் விளையாடுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் யாருடன் பேசுகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்