பிரேசில் நாட்டில் சாவோ போலோ நகரில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவரை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தந்தை தனது செல்போனை பறிமுதல் செய்ததால் கோபத்தில் சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை சுட்டு கொலை செய்துள்ளார்.

சுமார் மூன்று நாட்கள் கழித்து திங்கட்கிழமை தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தானே குற்றத்தை செய்து விட்டதாக 16 வயது சிறுவன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். முதலில் சிறுவன் முனிசிபால் போலீஸ்காரரான தனது தந்தையின்(57) துப்பாக்கியை எடுத்து அவரது முதுகுப் பகுதியில் சுட்டுக்கொலை செய்துள்ளான். பின்னர் தனது 16 வயது சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த தனது தாயையும்(50) அதே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான். மூன்று நாட்கள் சிறுவன் சடலங்களுடன் இருந்துள்ளார். அந்த சிறுவன் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளான். பேக்கரிக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளான். சனிக்கிழமையும் கோபம் குறையாது சிறுவன் தனது தாயின் சடலத்தை கத்தியால் குத்தியுள்ளான்.

தற்போது காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை பற்றி பேசும்போது சிறுவன் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கூலாக பதில் அளித்துள்ளான். இதுபற்றி வழக்குபதிந்த காவல்துறையினர் கொலைகளில் வேறு யாருக்காவது தொடர்ந்து இருக்கிறதா? குற்றச்செயலின் போது சிறுவனிடம் யாராவது செல்போனில் பேசினார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.