அமெரிக்கா ஓஹியோ நகரத்தில் எட்வர்ட் முர்ரே என்பவர் வசித்து வருகிறார். இவரும் அமினாடா கீதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்தனர். ஏற்கனவே அமினாடா கீதாவுக்கு கரீம் கீதா என்ற ஒரு வயதில் குழந்தை இருந்தது. கடந்த 5-ஆம் தேதி கரீம் கீதா வீட்டில் மயக்க நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதில் இதய தடுப்பு, மூளை பாதிப்பு, விலா எலும்பு முறிவு, கல்லீரல் சிதைவு, மூளை வீக்கம் ஆகியவை அடங்கும். காவல்துறை தரப்பில் குழந்தையின் மரணம் தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று எட்வர்ட் முர்ரே கரீம் கீதாவுடன் வெளியே விளையாட சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பியவுடன் குழந்தையை அறையில் படுக்க வைத்ததாகவும், களைப்பாக இருந்ததால் குழந்தை சாப்பிடவில்லை எனவும் கூறப்படுகிறது. போலீசார் எட்வர்ட் முர்ரேவை கைது செய்து விசாரித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட காயங்கள் குறித்து கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. எட்வர்ட் முர்ரே மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு தாக்குதல் வழக்கு, குழந்தை பாதுகாப்பு மீறல் வழக்கு என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.