திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், தமிழ்நாட்டுல ஊழல் வந்திருச்சாம்..  9 வருஷமா சொல்லிட்டு இருக்காரு.ஆக அந்த ஊழலை எல்லாம் நான் ஒழிச்சே  தீர்வேன். நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது…  ஊழலை பத்தி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு உண்டா ? ஊழலை பற்றி பேசுவதற்கு பிஜேபிக்கு என் அருகதை இருக்கு ?

ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி,  லஞ்சம் – லாவண்யம் பெருத்துப்போன ஆட்சின்னு சொல்லுது. உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்ப எங்க வந்துருச்சு. CAG Report-ல இன்னிக்கு ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுறாங்க.   எல்லாத்தையும் குறிச்சிட்டு தான் வந்து இருக்கேன்.

ஏன்னா புள்ளி விவரம் இது,  தப்பா பேசிட கூடாது. எதையும் ஆதாரத்தோடு தான் பேசணும். அதுக்காக  புள்ளிவிபரத்தை எல்லாம் குறிச்சி,  கையில எடுத்துட்டு தான் வந்திருக்கேன். ஊழலை பத்தி பேசுறதுக்கு பிஜேபிக்கு என்ன அருகதை இருக்கு ? நான் கேட்கிறேன்…  CAG அறிக்கை இன்னைக்கு என்ன சொல்லுது ? CAG அறிக்கைனா…  ஒரு ஆய்வறிக்கை.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய அமைப்பு அது.  ஒவ்வொரு வருஷமும்…  அன்னைக்கு அரசினுடைய நிலையை பற்றி…  அந்த அரசு செய்திருக்கிற செலவுகளை பற்றி…  அதை எல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் CAG-யினுடைய வேலை. CAG என்ன சொல்லுதுன்னா… ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி,  லஞ்சம் – லாவண்யம் பெருத்துப்போன ஆட்சின்னு சொல்லுது என விமர்சனம் செய்து பேசினார்.