தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்திற்காக கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியதால் கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தால் கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த மக்கள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.