
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும், இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை மாநகரப் பகுதியில மழை நீர் வடிகால் நாங்க அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் வெளியேறும் என்று வீர வசனம் பேசினார்கள்….
இன்றைக்கு பத்திரிக்கையாளர்களும், ஊடகமும் வெளிச்சம் போட்டு காட்டிட்டு இருக்கீங்க… நேற்றைக்கு முன்தினம் இரவில் இருந்து இன்று வரை ஆங்காங்கே சென்னை மாநகரம்…… சென்னை மாநகரத்தை ஒட்டிய பகுதிகளில் வெள்ள காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அதை எல்லாம் தொலைக்காட்சியில் நாம் பார்க்கிறோம். அதோடு சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது என்று, உங்களது தொலைக்காட்சி வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
4000 கோடி செலவு செஞ்சு ஏன் தண்ணி வடியவில்லை ? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த 4000 கோடி கூட நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்…. உலக வங்கி திட்டத்தின் மூலமாக, ஏடிபி ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலமாக நிதியைப் பெற்று, அந்த பணி துவங்குகின்ற காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு… திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர் விட்டு, இந்த பணியை தொடங்கினார்கள். இவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வரல…
நாங்க தான் அந்த திட்டத்தையும் கொண்டு வந்தோம்… ஆனால் இவர்கள் கமிஷன் வாங்குவதிலேயே குறிக்கோளாக இருந்த காரணத்தினால், உரிய காலத்தில் அந்த மழை நீர் வடிகால் பணி நிறைவடைந்த காரணத்தினால், பல்வேறு இடத்தில் கால்வாய்கள் இணைக்காத காரணத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் வருகின்ற வழியில் பார்த்தேன் என தெரிவித்தார்.