சில சமயம், இணையத்தில் நாம் பார்க்கும் காட்சிகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அதுபோல, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 8 முதல் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள், தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு உயிருள்ள பாம்பை, அது ஒரு விளையாட்டுப் பொருள் போலக் கருதி, மிகவும் அபாயகரமாகக் கையாளும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. சிறுவர்களின் இந்தப் பயமற்றச் செயல், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dk Imran (@imran_dk555)

வீடியோவில் உள்ள ஒரு சிறுவன், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து இழுக்கிறான். இது போதாதென்று, இருவரும் சேர்ந்து அந்தப் பாம்பை ஒரு காலியான குளிர்பானப் பாட்டிலுக்குள் அடைக்க முயற்சி செய்கின்றனர்.

பிடியில் இருந்து தப்பிக்க அந்தப் பாம்பு சுறுசுறுப்பாகவும், சீற்றத்துடனும் ஓடினாலும், அதை ஒரு பந்தைப்போல் கருதி விளையாடும் குழந்தைகளின் செயல், மிகவும் தைரியமானது என்றாலும், அவர்களின் இந்த அறியாமைக் காரணமாக அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.