இன்றைய வாழ்வில் மொபைல் ஃபோன் என்பது கல்வி முதல் வங்கிச் சேவைகள் வரை அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆனால், சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். அது என்னவென்றால், பெரும்பாலானோர் பணம், அடையாள அட்டைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை மொபைல் ஃபோனின் கவரில் வைத்துப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

ஃபோனை சார்ஜ் செய்யும்போது, விளையாடும்போது அல்லது பேசும்போது அது தானாகவே அதிகச் சூடாகும். இவ்வாறு சூடாகும் நிலையில், நாம் கவரில் வைக்கும் ரூபாய் நோட்டில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள், மொபைலின் வெப்பத்துடன் வினைபுரிந்து வெடிக்கும் அபாயத்தை உண்டாக்கலாம். மேலும், ஃபோனில் இருந்து வெளியேறும் காந்தப்புலத்தை நாம் வைத்திருக்கும் பணம் மற்றும் கார்டுகள் தடுப்பதால், ஃபோனில் உருவாகும் வெப்பம் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே தேங்கிவிடுகிறது.

இதன் விளைவாக, மொபைல் ஃபோன் மேலும் அதிகமாகச் சூடாகி, அது வெடிக்கும் ஆபத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, நமது அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமான கருவியான மொபைல் ஃபோனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, பணம், ஏடிஎம் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் போன்றவற்றைத் தனியாகப் பர்ஸிலோ அல்லது பைகளிலோ வைப்பதுதான் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த தீர்வாகும்.