பொதுச் சொத்துக்கள் மீது மக்கள் அக்கறை காட்டாமல் இருக்கும் இந்தச் சூழலில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, மக்களின் மனதைத் தொட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு கண்பார்வையற்ற முதியவர் பேருந்து இருக்கையின் தளர்ந்திருந்த கைப்பிடியை (loose handle) அமைதியாகச் சரிசெய்யும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த அசாதாரணச் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sadarudheen Vazhakkad (@sadarudheen_vazhakkad)

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் பார்வையற்ற முதியவர், இருக்கையின் கைப்பிடி உடைந்தும், தளர்ந்தும் இருப்பதை உணர்ந்து, அதைத் தன்னுடைய பொறுப்பாகக் கருதி, அக்கறையுடன் சரி செய்கிறார்.

இந்தப் பொதுச் சொத்து மீதான அவரின் அக்கறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதானதாகும். ஒரு சாதாரண குடிமகன் கூட, பொது இடங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை எப்படிப் பேணிக் காக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை உணர்த்தும் வகையில், இந்த முதியவரின் வீடியோவுக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.