சமூக வலைத்தளங்களில், ஒரு குலாப் ஜாமூன் விற்பனையாளருக்கும், வெளிநாட்டுப் பயணியொருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு பெரிய தட்டில் குலாப் ஜாமூன்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கும் அந்த விற்பனையாளரிடம், வெளிநாட்டுப் பயணி ஒருவர் ஆங்கிலத்தில் “ஒரு குலாப் ஜாமூனின் விலை என்ன?” என்று கேட்கிறார்.

அதற்குப் பதிலளித்த விற்பனையாளர், “நான்கு குலாப் ஜாமூன்கள் ₹200” என்று கூறியுள்ளார். உடனே அந்த வெளிநாட்டுப் பயணி, கடையில் வைக்கப்பட்டிருந்த சைன் போர்டைக் காட்டி, அதில் வெறும் ₹20 என்று எழுதப்பட்டிருப்பதைக் சுட்டிக் காட்டினார்.

தன் பொய் அம்பலமானதைக் கண்ட விற்பனையாளர், “அது வேறு குலாப் ஜாமூன், அது தீர்ந்துவிட்டது. இப்போது இருப்பது வேறு” என்று சமாளிக்க முயன்றார்.

இந்தக் குழப்பமான பதிலைக் கேட்ட அருகில் நின்றிருந்த சிறுவன் சிரிப்பது போன்ற காட்சியுடன், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.