கிழக்கு ஆசியாவில் ‘கல்கி’ சூறாவளியால் (Typhoon Kalgii) ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது ‘ஐபோன் 17 ப்ரோ’ மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மீண்டும் எந்தவிதப் பாதிப்பும் இன்றி இயங்கத் தொடங்கியது குறித்து ஒரு ரெடிட் பயனர் ஆச்சரியத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
வெள்ளத்தில் அவரது வீடு முழுவதும் சேதமடைந்ததுடன், அவரது போனும் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தை ரெடிட்டில் பகிர்ந்த அந்தப் பயனர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு சேற்றுக் குவியலிலிருந்து மீட்கப்பட்டபோதிலும், ஐபோன் 17 ப்ரோ மீண்டும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது ஆச்சரியம் என்று கூறியுள்ளார்.
வெள்ளத்தின் போது உயிர் தப்புவதற்காகப் போராடியபோது தனது கைகளில் இருந்து ஐபோன் நழுவிச் சென்றதாக அந்த ரெடிட் பயனர் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டபோது, போன் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால், அது மீண்டும் வேலை செய்யாது என்று அவர் நம்பிக்கை இழந்திருந்தார்.
இருப்பினும், போனைச் சுத்தம் செய்து சார்ஜ் செய்தபோது, ஐபோன் 17 ப்ரோ உடனடியாக இயங்கத் தொடங்கியதுடன், அதில் ஒரு கீறல் கூட இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் தண்ணீர் என்பது எந்த ஒரு கேஜெட்டிற்கும் மிகவும் ஆபத்தானது என்றாலும், இந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புத் தரத்தையும் (Build Quality) அதன் நீண்ட கால ஆயுளையும் காட்டுவதாக இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
