அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்குவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.