
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும். அவர் கையில் தானே காவல்துறை இருக்கு…. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்க தேர்தல் பரப்புரை இல்ல ரெண்டே மாசத்துல கொடநாடு கொலை வழக்கு விசாரிச்சு, நான் நீதியை வெளியே கொண்டு வருவேன் சொன்னீங்களா ? இல்லையா ? இப்ப ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு… ஏன் செய்யல ?
ஒன்னு நீங்க எடப்பாடி கிட்ட பணம் வாங்கி இருக்கணும்… ஏதாவது ஒன்னு நடந்திருக்கணும். அப்போ தூத்துக்குடி துப்பாக்கி சூடு சுட சொன்னவன் யார் என்று கேட்டிருக்கணும் இல்ல… சுட சொன்னது யாரு ? எங்கிருந்து உத்தரவு வந்தது ? 15 பேர் செத்திருக்கான்… அது எங்க இருந்து உத்தரவு வந்தது ? அந்த செயல்ல ஈடுபட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ? சட்டப்படி என்ன தண்டனை ? அம்மா அருணா ஜெகதீசன் உங்களுக்கு அறிக்கையை தாக்கல் பண்ணி… ஆறு, ஏழு மாசத்துக்கு மேல ஆயிருச்சு… ஏன் நடவடிக்கை எடுக்கல ?
அப்ப எதையுமே காலம் கடத்தி… மக்களின் கவனத்தில் இருந்து… நினைவில் இருந்து… நகர வரைக்கும் அத வச்சிட்டு… அப்படியே விட்டுட்டு போறது தான் உங்க வேலை என்றால் ? இது என்ன ஆட்சி முறை சொல்லுங்க ? இது கொடுமை. யார்ரா உன்ன சுட சொல்லி உத்தரவு கொடுத்தவன் ? மனு கொடுக்க தானடா வந்தான்… மனு வாங்கிட்டு திருப்பி அனுப்புவதை விட்டுட்டு, எப்படிடா நீ துப்பாக்கி சுட நடத்துண்ண… யாருடா உன்னை சுட சொன்னது ? ஒரு தொலை தூரத்தில் இருந்து சுடுற துப்பாக்கி…. குறி பார்த்து சுடற துப்பாக்கி… அதை கொண்டுட்டு… ஒரு வாகனத்தை நிறுத்தி…. அது மேல ஏறி, அப்ப நீ தயாரா இருக்க… அது கலவரம் நடக்கும்னு நீ எப்படி முடிவு பண்ண ?
உன்னை முடிவு பண்ண சொன்னது யாரு ? கண்ணீர் புகை இருக்குது… தண்ணீர் பீச்சி அடிக்கிற முறை இருக்கு…. தடியடி இருக்குது…. வெரட்டி விட முடியும். இவ்வளவும் இருக்கு. எடுத்தவுடனே துப்பாக்கி சூடு என்றால் ? அந்த உத்தரவு கொடுத்தவன் யார் சொல்லணும் வெளியில கொண்டு வரணும்… அநியாயத்தை எதிர்த்து நாங்க போராடினால் சிட்டுக்குருவி போல சுடுவ. ஒரு குருவியை சுட்டு விடுவியா? கொக்கை சுட்டு விடுவியா ? மானை சுட்டு போட்டுடுவியா ? அவ்வளவு கேவலமா ஆயிடுச்சு தமிழனுடைய உயிர்… அது கேட்க நாதி இல்லை என வேதனைப்பட்டார்.