சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் தெருவோரக் கடை ஒன்றில் ‘சோலே குல்சே’ என்ற உணவைச் சாப்பிடச் சென்றபோது, அந்த உணவிற்கான பணத்தை முன்கூட்டியே கொடுக்க முயற்சி செய்கிறார்.

ஆனால், அந்த உணவுக் கடைக்காரர் புன்னகையுடன் பணத்தைப் பெற மறுத்து, “பணம் வேண்டாம்” என்று கூறி அப்பெண்ணுக்கு அன்புடன் உணவை வழங்குகிறார். அந்தப் பெண் பலமுறை வற்புறுத்தியும், தன் முடிவில் உறுதியாக இருந்த அந்த வியாபாரி, அவரைத் தனது விருந்தினராகக் கருதி உபசரித்தது பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், இதுதான் உண்மையான இந்தியா என்றும், விருந்தினரே தெய்வம் என்ற பண்பாட்டிற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றும் பாராட்டி வருகின்றனர். வெளிநாட்டினரிடம் ஏமாற்றும் நபர்களுக்கு மத்தியில், சாதாரண தெருவோர வியாபாரியின் இந்தத் தாராள மனது பலரது இதயங்களை வென்றுள்ளது.

“>

 

மனிதாபிமானமும், அன்பும் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சிறிய நிகழ்வு உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.