உத்திர பிரதேசம் மாநிலம் உன்னாவ்வைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். பலமுறை எச்சரித்த போதிலும் அவர் தொடர்ந்து அந்த மாணவியை துன்புறுத்தி உள்ளார். இதனால் கடுப்பான அந்த மாணவி நடுரோட்டில் வைத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கி தனது காலில் கடந்த செருப்பால் அவரை அடித்தார்.

 

மேலும் அந்த வாலிபரை அந்த மாணவி கடுமையாக திட்டினார். இறுதியில் அந்த வாலிபரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்ய அந்தப் பெண் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.