மும்பை நகரத்தில் ஜூலை 22-ஆம் தேதி மாலை முதல் பெய்த கனமழையால், பாண்டுப் பகுதியில் உள்ள கிண்டிபாடா பகுதியில் ஒரு மிகப் பெரிய பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த சுவர், அப்பகுதியில் அமைந்துள்ள ஒமேகா மேல்நிலைப் பள்ளிக்குப் பின்னே, சுமார் 50 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. சுவர் இடிந்ததுடன் அருகிலிருந்த 5 வீடுகளும் பாதிக்கப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக, முன்கூட்டியே அபாயத்திற்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டதால், வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்பாளர்கள், சுவர் இடியும் தருணங்களை மொபைல் கேமராவில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
Mumbai Landslide: Multiple Homes Tumble Down As Wall Collapses In Bhandup Amid Heavy Rains#Mumbai #mumbairains #weather #landslide #mulund pic.twitter.com/zSfA4T6n7U
— Free Press Journal (@fpjindia) July 23, 2025
“>
கனமழையால் சுவரில் வெடிப்புகள் மற்றும் மண்ணில் தளர்வு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக வீடுகளை காலிசெய்துள்ள அரசு அதிகாரிகள், தற்போது மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரிய விபத்தாக மாறாமல் தவிர்க்கப்பட்டமை பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
