மனித உணர்வுகளுக்கும், சமூக பொறுப்புக்கும் எதிராக, வெறும் “லைக்” மற்றும் “வியூஸ்” வெறிக்காக எல்லா எல்லைகளையும் கடக்கத் தயாராக உள்ள இந்த காலத்தில், மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நேரத்தில் மனைவி ரீல்ஸ் எடுத்த அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில், ஒரு முதியவர் வயிற்றில் சோதனைக்காக குழாய்கள் இணைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் புரண்டு கிடக்கிறார். நர்ஸ் ஒருவர் சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவரின் மனைவி பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்க மும்முரமாக உள்ளார்.
View this post on Instagram
முகத்தில் சிரிப்பு, கைகளில் ஆக்ஷன், வீடியோவில் போஸ் – கணவர் உயிருக்கும் போராடிக்கொண்டிருக்கையில் மனைவி “பேஷன்ட்-வைக்” பின்புலமாக வைத்து ரீல்ஸ் உருவாக்கியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள், “மனிதநேயமே மறைந்துவிட்டது,” “வெட்கமில்லாத செயல்,” “இதற்காகவா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்?” என கடுமையாக விமர்சிக்கின்றனர். “இது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட தருணம். அதை சமூக வலைதள பிரபலத்துக்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
