பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக வலைதளம் இருப்பதே பொய்யை பேசுவதற்கு தான். பொய் செய்தியை போடுவதற்கு தான். முதலில் டிஆர்பி ராஜா போட்டுக்கிட்டு இருந்தார். அவர் அமைச்சர் ஆன பிறகு அந்த பதவி வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டாங்க. பொய்யை பேசுவதற்கு அவர்கள் பயன்படுத்துவது சமூக வலைதளம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இளைஞர்களுடைய எண்ணத்தை சமூகவலை தளத்தில் வெளிப்படுத்துறாங்க.

திமுகவில் எந்த இளைஞர்களும் இல்லை அவுங்க எப்படி வெளிப்படுத்துவாங்க. பாரதிய ஜனதா கட்சியினுடைய சமூக வலைதளம் தான் உலகிலேயே அதிகமான பாலோவர்ஸ் கொண்டுள்ளது. சோசியல் மீடியால உலகிலேயே அதிகமான பாலோவர்ஸ் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இருக்கு. இந்தியாவுல டாப் அக்கவுண்ட் எடுத்து பாத்தீங்கன்னா.. பிஜேபி அக்கவுண்ட்ஸா தான் அதிகமா இருக்கும்.  காரணம் இளைஞர்களுடைய மென்டாலிட்டியை எதிரொலிக்கின்ற சோசியல் மீடியா அக்கவுண்ட் பாஜக கிட்ட இருக்கு. வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க. முதல்வர் எங்கிருந்து சொல்ல வருகிறார் என எனக்கு தெரியும்.

மூன்று தினங்களுக்கு முன்பு வாஷிங்டன் போஸ்ட்ல ஒரு கட்டுரை எழுதுறாங்க. இந்த மாதிரி பாரதிய ஜனதா கட்சியினுடைய சோசியல் மீடியா என்று சொல்லி….  கர்நாடகா எலக்சன்ல போயி,  யாரோ ரெண்டு பேர்த்த இன்டர்வியூ பண்றாங்க. இன்னைக்கு தமிழகத்தில் சோசியல் மீடியாவில் கருத்து போட்டதற்காக பாரதி ஜனதா கட்சி எத்தனை பேரை கைது பண்ணி இருக்காங்க ?

இன்னைக்கு நாமக்கல்லை சார்ந்த நம்முடைய ஐடி விங்  தம்பி,  இளைஞரணி ஐ.டி விங்  தம்பி ஒருவரை காலையில் 2 மணிக்கு அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. கரூர் போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. தமிழகத்துல பாரதிய ஜனதா கட்சி ஒரு கருத்து போட்டாலே அவதூறு என்று சொல்லி கைது பண்ணுறாங்க. இந்த ஆட்சிக்கு பயம் ஒரு ஒரு பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களை எல்லாம் கைது பண்ணிட்டு இருக்காங்க என் தெரிவித்தார்.