கிழக்கு ஆப்ரிக்க நாடு கென்யா. இங்கு கடந்த மார்ச் மாதம் முதல்  கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள மிகப் பழமையான ஹிஜாப் அணை வெள்ளத்தால் சேதமடைந்து தடுப்பு சுவர் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் கடந்த மார்ச் மாதம் முதலே அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளிடம் கென்யா அரசு உதவி கேட்டுள்ளது.