செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட் ஆவதற்கு முன்னாடியே இங்கு டெங்கு ஸ்டார்ட் ஆயிட்டு. எப்போதுமே வடகிழக்கு பருவமழைக்கும் முன்னாடி நாம தொற்று நோய்களில் கவனமா… விழிப்புணர்வாக சுகாதாரத்துறை இருக்கும். நாம் சொன்ன கேரளால நிப்பா வைரஸ் வந்தபோதும் இந்த அரசை நான் எச்சரித்தேன். ஒவ்வொரு முறையும் இந்த அரசுக்கு சரியான நேரத்தில் நாங்கள் சுட்டி காட்டிக் கொண்டே இருக்கிறோம்.

நோய் தொற்று பரவாமல் பார்க்க வேண்டியது அரசினுடைய கடமை. இப்போது டெங்கு ரொம்ப அதிகமா இருக்கு. அதனால கொசுவை ஒழிப்பதற்கு ரிவியூ மீட்டிங் நடத்துங்க. முதல்ல தமிழ்நாடு முழுக்க அம்மாவுடைய ஆட்சியில் நாங்கள் ரிவ்யூ மீட்டிங் நடத்துவோம். ரிவ்யூ மீட்டிங்கில் சுகாதாரத்துறையை மட்டும் நீங்கள் இணைந்தால் பத்தாது.

சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை இன்னும் பிற துறைகள் எல்லாம் சேர்ந்து… உள்ளாட்சி பிரதிநிதிகளையும் சேர்த்து… வைத்து ஒரு மல்டி டைமென்ஷன்ல தமிழகம் அளவில் ஒருங்கிணைந்த மீட்டிங் நடத்தணும். அப்படியெல்லாம் நடத்தி தான் டெங்கு ஒழித்தோம்.

ராஜபாளையத்தில் எல்லாம் எவ்வளவு பெரிய நிகழ்வு ஏற்பட்டது. அந்த மாதிரி அணுகுமுறை எல்லாம் இந்த அரசு கிட்ட இல்ல. நம்முடைய மாவட்டத்திலே பார்த்தீங்கன்னா…  ரிவியூ மீட்டிங் நடக்கலையே. ஒரு ஆய்வு கூட்டம் நடத்தினால் தான் கள நிலவரம் கிடைக்கும். காவேரி உபரி நீர் திட்டம் என்ன ஆச்சு ? ஆறு வெட்டக்கூடிய பணிகள் என்ன ஆச்சு ? ஓராண்டுல 11 மாதத்தில் மருத்துவக் கல்லூரியை கட்டி முடித்தோம். பல் மருத்துவக் கல்லூரி நிலைமை போய் பாருங்க ? ரெண்டு வருஷம் ஆச்சுங்க…  இந்த ஆட்சிக்கு நாங்கள் டெண்டர் விட்டுட்டு போயி ரெண்டு வருஷமா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.

பல் மருத்துவ கல்லூரிக்கு இப்பதான் 30 அட்மிஷன் வந்திருக்கு. இப்போது வரைக்கும் பல் மருத்துவ கல்லூரியை திறப்பு விழா… நான் சொன்னாதான் திறப்பாங்க. இப்ப நான் பேட்டி கொடுத்து இருக்கேனா.. ஒரு வாரத்தில் வேலை நடக்கும். பல் மருத்துவக் கல்லூரியை இதுவரை இந்த அரசு 2  1/2 ஆண்டுகளாக திறக்கவில்லை. அம்மா ஆட்சியில் கொண்டு வந்தது. அம்மா ஆட்சியில் கொண்டு வந்த பூங்கா.

இதெல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் அல்லவா….  எந்தெந்த திட்டங்கள் எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதோ,  அப்பதான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால மக்கள் திட்டங்கள் அம்மாவுடைய ஆட்சியில்…  அண்ணன் எடப்பாடியார் காலத்தில நாங்க எல்லாம் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களையாவது நீங்க பயன்பாட்டுக்கு கொண்டு வாங்க என்கிறது தான் கேட்கிறோம். நீங்க புதுசா எதுவும் செய்யல,  பயன்பாட்டுக்கு கொண்டு வாங்க என சொல்றோம் என தெரிவித்தார்.