“ஒரே நாடு, ஒரே வரி” – வரலாற்றுச் சீர்திருத்தம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரி அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு, இனிமேல் 2 மட்டுமே அதாவது 5% மற்றும் 18%.
செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றம், ஏற்கனவே இருந்த நான்கு நிலை வரி (5%, 12%, 18%, 28%) முறையை நீக்குகிறது. இதன் மூலம், பொதுமக்கள், சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தெளிவான நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டு செலவுகளில் நிவாரணம்
- பால், தயிர், பன்னீர், சாக்லேட், பிஸ்கட், உலர் பழங்கள் – இவை முன்பு 12% வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி வெறும் 5% மட்டுமே.
- ஆடைகள், காலணிகள் – 12% இருந்தது 5% ஆக குறைக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்.
- அடிப்படைப் பொருட்கள் (எண்ணெய், சோப்பு, பற்பசை, முடி எண்ணெய்) – 18% இருந்த வரி இனி 5% மட்டுமே.
- டிவி, ஏசி, வாஷிங் மெஷின் – 28% இருந்தது இப்போது 18% மட்டுமே.
இதன் மூலம், சாதாரண குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் குறைவது உறுதி.
வியாபாரிகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. களுக்கு நன்மை
நான்கு நிலை ஜிஎஸ்டி முறையிலிருந்து இரண்டு நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கடுமையான வரி நடைமுறைகள், சிக்கலான படிவங்கள், நீண்ட கால பணம் திரும்பப்பெறும் (ரீபண்ட்) சிக்கல்கள் எல்லாம் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக சிறு வியாபாரிகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. துறைக்கு இது மிகப்பெரிய நன்மையாக அமைகிறது.
தமிழகத்தில் துறைவாரியான தாக்கம்
- நூல் & நெசவு துறை – திருப்பூர், கோயம்புத்தூரின் பருத்தி, நூல் உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி போட்டித் திறன் உயரும்.
- தோல் & காலணி – அம்பூர், வேலூர் பகுதிகளில் வரி 12% இருந்து 5% ஆக குறையதால் வேலை வாய்ப்புகள் உயரும்.
- மீன்வளத் துறை – உலர் மீனுக்கு வரி விலக்கு நீடிக்கிறது. மீன்பிடி உபகரணங்கள் மலிவாகும்.
- ஆட்டோமொபைல் துறை – சிறிய கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு 28% இருந்தது 18% ஆக குறையதால் சென்னை, ஹோசூர் தொழில்துறை வளாகங்களுக்கு விற்பனை வளர்ச்சி.
அரசியல் & பொருளாதார முக்கியத்துவம்
முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் எக்சைஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ், என்ட்ரி டாக்ஸ் போன்ற பல்வேறு வரிகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்ததால் குழப்பம், ஊழல் அதிகம்.
ஆனால், “ஒரே நாடு, ஒரே வரி” என்ற மோடி அரசின் பார்வைமுறையின் கீழ், தற்போது 99% பொருட்கள் 5% வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது உலகத் தரத்தில் வெளிப்படையான, எளிமையான வரி முறையென மத்திய அரசு வலியுறுத்துகிறது.
எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம்
இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம், குறுகிய காலத்தில் பொதுமக்கள் செலவுகளை குறைத்து, நீண்ட காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். குறிப்பாக தமிழகத்தின் தொழில் துறைகள் இதனால் புதிய முன்னேற்றத்தை அடையும் என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
👉 “சப்கா ஸாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்” என்ற பிரதமர் மோடியின் கொள்கையை பிரதிபலிக்கும் இந்த மாற்றம், வரி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
