தமிழகத்தில் விரைவில் பிராமணர்களுக்கு என்று கட்சி தொடங்கப் போவதாக நடிகர் எஸ்.வி சேகர் அறிவித்திருந்த நிலையில் இன்று ”அறவோர் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சி பெயரை அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகம் புதுவையில் 33 இடங்களில் பிராமணர்கள் வேட்பாளராக நிற்பார்கள். அவர்களுக்கு பிராமணர்கள் வாக்களித்தால் போதும். பிராமணர்கள் வாக்குகளை ஒன்றிணைத்து பலத்தை நிரூபிப்பதே நோக்கம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.