நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய சாதனை. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  காங்கிரசின் ஒவ்வொரு செயலும் அரசியல், தேர்தல், ஆட்சி அமைத்தல், இதை பற்றியே சுற்றி கொண்டிருக்கும்.

எங்கே அதிக சீட்டு கிடைக்குமோ ? எங்கே அவர்களது அரசியல் வேகுமோ, அங்கே சென்று ஓட்டு கேட்பார்கள். ஆனால் வடகிழக்கு இந்தியாவில் அவர்கள் முயற்சி என்னவாக இருந்தது என்றால் ? ஒன்று இரண்டு சீட்டு கிடைக்கும். ஆகவே அந்த பகுதியில் அவர்களுடைய கருத்து எதுவுமே இல்லை. அவர்களுடைய கவனம் அதன் மீது எதுவும் இல்லை.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே..  ஒன்று இரண்டு சீட்டுகள் மட்டுமே இருக்கின்ற இந்த பகுதிகளில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டது. வடகிழக்கு பகுதியில் அவர்களது நடவடிக்கை இப்படிதான் இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் எங்களுடைய முயற்சிகள் என்னவாக இருந்தது என்பதை சொல்கிறேன் ?  எங்களுடைய வடகிழக்கு இந்தியா எங்கள் இதயத்தில் ஒரு பகுதி, உயிரில் ஒரு பகுதி.

இன்று மணிப்பூரின் பிரச்சனைகளை இவர்கள் சொல்லுகின்ற விதம் என்னவென்றால் ? கடந்த காலங்களில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்பது போல் இவர்கள் சொல்கிறார்கள். நேற்று மிகவும் விவரமாக பிரச்சனை என்னவென்று நாங்கள் சொன்னோம்.  ஆனால் இன்று நான் மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லுகிறேன். வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் என தெரிவித்தார்.