நில மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பட்டா, சிட்டா முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்காக டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்த பதிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைதளமான https://eservices.tn.gov.in/eservicesnew மூலம் ஆன்லைனில் அணுக முடியும்.

மேலும் ஒரு தனி நபர்கள் நில உரிமை தகவலை எளிதாக சரிபார்த்துக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் நிலத்தை வாங்குபவர்கள் பட்டா தகவல்களை ஆன்லைனிலேயே சரி பார்த்து புதுப்பிக்க உதவுகிறது.

அதனால் மோசடிக்கான வாய்ப்புகள் குறைகின்றன. இந்நிலையில் இ- பட்டாவில் ஏற்கனவே புகைப்படங்களை இணைக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஆதார் எண்களையும் இணைக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.