ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்ததாக ஜெயக்குமார் கூறியுள்ளார். பணத்தை நம்பாமல் அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்தோம். பண பலத்திற்கு மத்தியிலும் இடைத்தேர்தல் முடிவை பார்க்கும்போது அதிமுக எழுச்சியாகவே உள்ளது தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்ததாக குற்றம் சாட்டினார்.