தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றார். அதன் பிறகு இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது என்றார்‌. மேலும் தொடர்ந்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, புதுக்கோட்டை தீண்டாமை வயல் வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.