தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டப்பட்டவர் தான் நடிகை மனோரமா. இவரது காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். நடிகை மனோரமா சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் ஆவார். கடந்த 1964 ஆம் வருடம் ராமநாதன் என்பவரை மனோரமா  திருமணம் செய்த பின், சில காரணங்களால் 1966ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

குடும்பம் ஒரு கதம்பம் எனும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பூபதி பிறகு, சில படங்களில் நடித்தார். இதற்கிடையில் பூபதிக்கு மதுப் பழக்கம் வர, அதனால் பல சோதனைகளை சந்தித்துள்ளார். அதோடு கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுக் கிடைக்காமல் பூபதி தூக்க மாத்திரை சாப்பிட, உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.