நடிகை ஜோதிகா கடைசியாக தமிழ் சினிமாவில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார் ஜோதிகா. அதற்கு முன்பாக மலையாளத்தில் காதல் எனும்  படத்தில் நடித்து முடித்தார். பாலிவுட்டில் ஜோதிகாவின் கம்பேக் படத்துக்கு ஸ்ரீ (Sri) என பெயரிடப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து அந்த படத்தின் சூட்டிங்கை அண்மையில் தான் நிறைவு செய்தார் ஜோதிகா. இப்போது ஜோதிகா புது ஹேர்ஸ்டைலில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஜோதிகாவா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.