1978 ஆம் ஆண்டு திரனோட்டம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மோகன்லால் தனது 18வது வயதில் நடிகராக அறிமுகமானார். இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனுள் ஒருவராகவும் உள்ளார். தற்போது இவரது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏற்கெனவே அவரது நடிப்பில் வந்த திரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் இதையடுத்து வந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை.

இந்நிலையில் மலையாளத்தில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளதில் அவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்தது அலோன் படம் . இந்த படத்தின் முதல் நாள்  ரூ.45 லட்சம் மட்டுமே வசூலாகி, பெரிய தோல்வி அடைந்தது. இதன் பின் மான்ஸ்டர் படமும் தோல்வியை தழுவியது.

மோகன்லால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த கூடியவர் என்ற பெயர் பெற்றவர். இந்நிலையில் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது திரையுலகினர் இடையே பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவரது படங்கள் தோல்வி அடைந்தாலும், அவரின் சம்பளம் அதிகரித்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.