அஜித்குமார் நடித்த ‘துணிவு’ படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார்.‘ஏகே 62’ என இப்படம் அழைக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருப்பதாகவும்,  தீபாவளிக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் வழக்கமான அதிரடி சண்டை படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா என கூறிவந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னொரு கதா நாயகியாக கீர்த்தி சுரேசை அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.