நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. இந்நிலையில் மும்பையின் மன்னாட் பகுதியிலுள்ள ஷாருக்கானின் வீட்டின் முன் பெரும்பாலான ரசிகர்கள் நேற்று மாலை குவிந்தனர். அப்போது வீட்டின் பால்கனிக்கு வந்த ஷாருக்கான், கையை அசைத்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார். அதோடு பிளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஷாருக்கான்.