தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடடே சுந்தரா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது “தசரா” படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி இருக்கிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதோடு பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தில் இருந்து இதுவரையிலும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தசரா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டிரைலர் வருகிற 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.