2023 ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி ஸ்டூடியோவில் இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்கர் விழாவில் இசைக்கப்படும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட இருப்பதாக அமெரிக்க நடன மங்கை லாரன் காட்லிப் தனது இன்ஸ்டால் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான போட்டியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இடம்பெற்றுள்ளது.

இந்த படம் ஏற்கனவே சர்வதேச விருதான கோல்டன் குளோப் விருதையும் வென்றிருக்கிறது. சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.