ஜாமீனில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூட்டுப்பர் டிடிஎப் வாசன், நீங்களே நியாயமா?  என சொல்லுங்களேன். நான் உதாரணமாக தானே இருக்கேன். சிறை அனுபவம் கண்டிப்பா கஷ்டம் தான். எனக்கு கொஞ்சம் உள்ள எல்லாம் நிறைய சிறைவாசிகள் எல்லாம் தெரிஞ்சவங்க இருந்தாங்க. கை உடைஞ்சிருக்கு… குளிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டம்…  முதுகெலும்பு உடைஞ்சிருக்கு… படுகிறது கொஞ்சம் கஷ்டம்…. பசங்க தான் தலையெல்லாம் குளிப்பாட்டி விட்டாங்க. ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தாங்க, ஓகே தான்… அதிகாரிகள் எல்லாரும் பண்பா தான் நடத்தினார்கள்.

பைக் தான் என்னோட லைப். என்னோட பேஷனை தான், நான் ப்ரொபஷனலா மாத்தி இருக்கேன். என் லைஃப் ஃபுல்லாமே நான் பேஷனுக்காகவே அர்ப்பணித்து இருக்கேன். அப்படி இருக்கும்போது பத்து வருஷம் வாகன ஓட்டுநர் உரிமம் இரத்து செஞ்சது ஏதோ நியாயம் இல்லாத மாதிரி இருக்கு. இது திருத்துகின்ற மாதிரி இல்ல. வாழ்க்கையை  அழிக்கணும் என்கிற மாதிரி இருந்துச்சு, பட் ஒன்னும் பிரச்சனை இல்ல.

குடுத்த கம்ப்ளைன்ட் தப்பா இருக்கு.   நான் ஆக்சிடென்ட் ஆகிய உடனே நான் மயங்கிட்டேன்.  கம்ப்ளைன்ட்ல புதுசு புதுசா எழுதி இருக்காங்க.என்னை பார்த்து சிறுவர்கள் தப்பான முறையில் என்ன இயக்குறாங்க. ஏன் சிறுவர்கள் கிட்ட பைக் தர்றீங்க ? ஏன் சிறுவர்கள் கிட்ட பைக் தர்றீங்க ? நான் என்னோட எல்லா வீடியோஸ்ல சொல்லுறேன். அதுலாம் பாத்து இம்ப்ரஸ் ஆக மாட்டாங்க ? நீங்க சொல்லுறீங்களே என்னை பார்த்து சிறுவர்கள் பெரிய சூப்பர் பைக் எல்லாம் கேக்குறாங்க அப்படின்னு….

நீங்க சொல்லுறீங்களே என்னை பார்த்து சிறுவர்கள் பெரிய சூப்பர் பைக் எல்லாம் கேக்குறாங்க அப்படின்னு…. நான் குட்டி பையனா இருக்கும்போது ஹெலிகாப்டர் வேணும்னு வீட்டுல சண்டை போட்டேன். நம்ம தானே குழந்தைகளுக்கு சொல்லி திருத்தணும். கேட்டவுடனே வண்டி வாங்கி தருவது என்ன நியாயம் ?  இந்த ஜெனரேஷன் எல்லாம் ரொம்ப ஸ்மார்ட். நீங்க சொல்லுங்க பத்தாவது படிக்கும்போது என்ன பார்த்துட்டு இருப்பீங்க ? டிவி…  உங்களுக்கு இந்த அளவுக்கு மெச்சூரிட்டி இருக்குமா ? உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க. ஆனால்  இப்போ இருக்குற டென்த், 12த் ஸ்டூடண்ட், காலேஜ் ஸ்டூடண்ட் எவ்ளோ மெச்சூரிட்டியா இருக்காங்க. கரெக்டான வழியில் அவங்க போனா இன்னும் பயங்கரமா போவாங்க.

சிறையில் மருத்துவ வசதி எல்லாம் நல்லா தான் செஞ்சு கொடுத்தாங்க. என் கை கோணையா போயிடுச்சு….  மறுபடியும் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க. பெரும்பாலான ஊடகங்களில் உங்கள் கை உடையவில்லை அப்படி  சொன்னாங்களே ? அதை  எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,  பதில் அளித்த டிடிஎப் வாசன், எனக்கு ரொம்ப ஒரு மாதிரியா ஆயிடுச்சு. நம்ம ஆல்ரெடி பத்து பதினைந்து மன கஷ்டத்தோட உள்ள இருக்கின்றோம். 

நியூஸ் பேப்பர்ல சம்திங்…  யாரோ ஒருத்தங்க சொன்னது மூலமா ?  வெளியே இருந்து புதுசா உள்ள வந்தவர்கள் கையே உடையலாம என்று சொன்னாங்க…  ஒரு கட்டத்துல நானே சொன்னேன். நானே சும்மா தான்பா கட்டு போட்டு இருக்கிறேன். நீ வேற அப்படின்னு சொன்னேன். கை உண்மையாவே உடைஞ்சிருக்கு.

கண்டிப்பா பைக்கும் ஓட்டுவேன். படமும் நடிப்பேன். பேஷனை எப்பவுமே விட்டுக் கொடுக்க முடியாது. இன்டர்நேஷனல் லைசென்ஸ் எடுக்கலாம். இன்னும் மேல்முறையீடு எதுவும் பண்ணலாம். இந்த கை போனதை விட,  லைசென்ஸ் போனதுதான் கண் கலங்கிட்டேன். எல்லாத்துக்கும் ஸ்ட்ராங்கா தான் இருப்பேன்.

லைசென்ஸ் 10 வருஷம் கேன்சல் என்றதும் ரொம்ப வருத்தமா இருந்துச்சு.போராட்டம் பண்ணாம இருந்தது… ஒன்னு கூடாம இருந்ததே ரொம்ப நல்லது. என்ன பார்க்க வரும்போது அது எல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.  நேபால் மட்டும்தான் போய் இருக்கேன். அதுக்குள்ள தான் பாஸ்போர்ட் வாங்கி வச்சிட்டு வேற எந்த நாட்டுக்கும் போக முடியல.நாங்க வாங்குவோம், அப்பறோம் கிளம்புவோம்.

TTF பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி நாங்க கிரியேட்  பண்ணி இருக்கோம். டிடிஎஃப் பிட் ஷாப் என்று ஒரு கடை ஆரம்பிச்சி இருக்கோம். இன்னும் ஸ்டாக்ஸ் எல்லாம் இறக்கவில்லை. இனி வெளியே போய் லோட் வாங்கணும். அதுலயும் ஹெல்மெட்,  ரைட்டிங் ஜாக்கெட்,  ஸ்போர்ட்ஸ்க்கு தேவையான எல்லா பொருளும் இருக்கும்.

என்ன பேசினாலும் தப்பா தான் போடப் போறீங்க. உங்களுக்கு புடிச்ச மாதிரி போட்டுக்கோங்க. ஸ்டூடண்ட்ஸ்க்கு அறிவுரை சொல்றீங்களா ? என்ற கேள்விக்கு, எங்க போனாலும் ஹெல்மெட் போட்டு போங்க. எனக்கு மிகப்பெரிய விபத்து நடந்திருக்கு. முதுகுல  சின்ன பிராக்சர் தான் இருக்கு. அதுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன். கிட்டத்தட்ட படுத்துட்டு தூங்க முடியல. அவ்வளவு வலியா இருக்கு. யார் எங்க போனாலும் ரைடிங் டிரஸ் போட்டுட்டு போங்க.

நான் எவளோ நியூஸ் பார்த்து இருக்கேன். 6  மாசம் லைசென்ஸ் கேன்சல் பண்ணி  இருக்காங்க.6  மாசம் லைசென்ஸ் கேன்சல் பண்ணி  இருக்காங்க. 10 வருஷம் எப்படி ?என்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இப்போ கூட பார்த்தீர்கள் என்றால் 308 என்று இரு கேஸ் போட்டு இருக்காங்க.நானா தற்கொலை பண்ணி என் கைய ஒடச்சிகிட்டேன் என்று தான் போட்டு இருக்காங்க. இதுக்கே கிட்டத்தட்ட 45 நாள்,  46 நாள் ஆயிடுச்சு.   எங்க போனாலும் ரைடிங் டிரஸ் போட்டு,  கவனமா  போங்க என தெரிவித்தார்.