திரை உலகில் சிறிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை காயத்ரி குப்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்களை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சாய் பல்லவி நடித்த ஃபிடா படத்தில் தோழி வேடத்தில் நடித்த அவர், சமீபத்திய பேட்டியில் காஸ்டிங் கவுச், தந்தையால் நடந்த சித்திரவதை, மற்றும் துறையில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் கூறியுள்ளார்.

“சினிமா துறையில் காஸ்டிங் கவுச் இருக்கிறது. சில ஹீரோயின்கள் ஆஃபர்களுக்காக கமிட்மென்ட் கொடுக்கிறார்கள். எல்லாப் பெண்களும் தூய்மையானவர்கள் அல்ல, எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல. ஆனால் என் விஷயத்தில், அப்பாவுடன் இருந்த உறவு முற்றிலும் உடைந்துவிட்டது. என் அப்பா மின்சார கம்பியால் அடிப்பார், காயங்களில் மிளகு தடவுவார், பைத்தியமாக சபிப்பார்” என்று அவர் கூறினார்.

திரைப்பட உலகில் நுழைந்த பிறகு பல பாலியல் தாக்குதல்களை சந்தித்ததாகவும், “ஒரு திரைப்பட விருந்தில் போதைப்பொருள் கலந்த பானம் குடிக்க வைத்தனர். பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு தயாரிப்பாளர் என் உடையை இழுத்து, ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டார். என் உடை தான் அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியது. ஒரு மணி நேரம் சங்கடப்படுத்திய பிறகு என்னை விட்டுவிட்டார். அதன்பின், ஒரு நிகழ்வு மேலாளர் என்னை தவறாக கட்டிப்பிடித்தார்” என்று காயத்ரி குப்தா அதிர்ச்சி வெளிப்படுத்தினார்.

அவரது இந்த வெளிப்படையான பேட்டி, திரை உலகில் நடைபெறும் காஸ்டிங் கவுச் மற்றும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.