தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கி நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய காமெடி வேடத்தில் நடித்ததால் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெய்லர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதே போன்று தொலைக்காட்சி தொடர்களில் ஆனந்த ராகம், அரண்மனைக்கிளி மற்றும் திருமகள் போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டு தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். மேலும் இவர்களது சீமந்தம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து சமீபத்தில் தங்களது பெண் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை நடிகை சங்கீதா தனது இன்ஸ்டா அக்கவுண்டில் பகிர்ந்து குழந்தைக்கு ஆட்லின் விக்டோரியா என பெயரிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.