ஒரு கார் ஷோரூம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லம்போர்கினி (Lamborghini) சூப்பர்காரைப் பார்த்த இரண்டுச் சிறுவர்கள், உற்சாக மிகுதியால் அதனுள்ளே ஓடிச் சென்று மற்ற விலையுயர்ந்த மாடல்களான மெக்லாரன் 720S (McLaren 720S), மற்றும் பென்ட்லி (Bentley) போன்ற கார்களையும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இந்தச் சிறுவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட, அந்தக் காரின் உரிமையாளரும் நிறுவனருமான நிஷாந்த் சபூ (Nishant Saboo), அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க முடிவு செய்தார்.
View this post on Instagram
நிஷாந்த் சபூ, அந்தச் சிறுவர்களைத் தனது லம்போர்கினி காருக்குள் அமர வைத்துப் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
விலையுயர்ந்தக் காருக்குள் அமர்ந்த அந்தக் குழந்தைகளின் முகம் முழுவதும் பரவியச் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கண்ட இணையவாசிகள், நிஷாந்த் சபூவின் இந்தப் பெரிய மனதுள்ள செயலைப் பெரிதும் பாராட்டினர்.
“மனிதநேயத்தை விட விலையுயர்ந்தது எதுவும் இல்லை. குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்ததற்கு நன்றி” என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
