விமானச் சேவை நிறுவனம் ஒன்றில் தொடர்ந்து நான்கு நாட்களாக விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும்ப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையம் ஒன்றில், நீண்ட நேரம் ஏற்பட்டத் தொடர் தாமதத்தால், தவித்துக் கொண்டிருந்த தனது மகளுக்கு சானிட்டரி நாப்கின் (Sanitary Pad) கேட்டு, விமானச் சேவை அதிகாரிகளிடம் உருக்கத்துடன் கெஞ்சிய ஒருத் தந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“सिस्टर, मेरी बेटी को सेनेटरी पैड चाहिए…
नीचे से ब्लड गिर रहा है।
पिता रो रहा है।
फ़्लाइट टाइम पर नहीं चल रहा है,
सत्ता के नाम पर सट्टा चल रहा है।
अच्छे दिन आ गए…#अमृतकाल चल रहा है.#घोरकलजुग #IndigoDelay pic.twitter.com/J8YjPJB7qh— अपूर्व اپوروا Apurva Bhardwaj (@grafidon) December 5, 2025
அந்த வீடியோவில், அந்தத் தந்தை ஒரு பெண் அதிகாரியிடம், “என் மகளுக்கு நாப்கின் வேண்டும். அவளுக்குக் இரத்தம் வருகிறது” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதைக் காண முடிகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் காட்டிலும், ஊழியர்கள் உடனடியாகப் பதிலளிக்காமல், “சார், எங்களால் அப்படிச் செய்ய முடியாது” என்று கூறியது, ஏற்கனவே அங்கு நிலவியச் சூழலை மேலும்ச் சிக்கலாக்கியது. விமானத்தின் தாமதம், தகவல் இல்லாமை மற்றும் போதுமான உதவி வழங்கப்படாதது ஆகியவற்றால் பயணிகள் கோபமடைந்துள்ளனர்.
விமானத்தின் இந்தச் செயல்பாடு குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சிக்கல்கள் தீர இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம் என்றும், பிப்ரவரி 10, 2026-க்குள் முழுமையாகச் சீரடையும் என்றும் விமானச் சேவை நிறுவனம், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) தெரிவித்துள்ளது.
