உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் (Varanasi) உள்ள ஒரு குடியிருப்பில், குழந்தைக்குப் பயன்படுத்திய டயப்பர்களைக் குப்பைத் தொட்டியில் போடாமல், தங்கள் பால்கனிக்கு வெளியே இருந்த மரத்தின் மீது தூக்கி வீசிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த மரம், இலைகளை விட டயப்பர்கள் அதிகமாகத் தொங்கிக் கொண்டுள்ளதால், அது பார்க்கவே அருவருப்பான காட்சியை ஏற்படுத்தியுள்ளது.
People have converted this tree into a diaper tree by throwing used diapers onto it
There is a limit of being uncivic. We Indians knows no boundaries. pic.twitter.com/jE7wq0cdZD
— 🚨Indian Gems (@IndianGems_) December 3, 2025
வீடியோவை பதிவு செய்த அந்தப் பெண்மணி, “இப்படிப்பட்டச் சூழலைத்தான் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றுப் வேதனையுடன் குற்றம் சாட்டினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பொது அறிவு (Civic Sense) மற்றும் சமூகப் பொறுப்பு குறித்துப் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தங்கள் வீட்டை மட்டும்ச் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதும் என்று நினைப்பவர்களை இணையவாசிகள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
