கார்ப்பரேட் வாழ்க்கையில் விடுப்பு கேட்பது எளிதான காரியமல்ல. ஒரு பெண் ஊழியர், தனது சகோதரனின் திருமணத்திற்காக நிறுவனத்தில் விடுப்பு கேட்டபோது, முதலாளியின் பதில் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அந்த பெண், கூடுதல் வேலை, புதிய ஊழியர்களுக்கு பயிற்சி, குறைந்த ஊதியத்தில் கடினமான காலங்களில் பணியாற்றுதல் என நிறுவனத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.
ஆனால், தனிப்பட்ட தேவைக்காக விடுப்பு கேட்டபோது, முதலாளி விடுப்பு மறுத்து, திருமணத்திற்கு செல்ல வேண்டுமானால் வேலையை விட்டு விலகுமாறு கூறினார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த பெண், விடுப்பு நாட்களைக் குறைக்க முயற்சித்தும் முதலாளி மறுத்துவிட்டார்.
“நிறுவனத்திற்கு நான் எல்லாவற்றையும் கொடுத்தேன், ஆனால் அவர்கள் என் தேவைகளைப் புரிந்து கொள்ளவில்லை,” என அவர் பதிவிட்டிருந்தார்.
இதனால், வேறு வழியின்றி அவர் வேலையை விட்டு விலகினார். நிறுவனம் நோட்டீஸ் காலத்தை முடிக்க வற்புறுத்தியபோதும், அவர் அதைப் புறக்கணித்து தனது முடிவை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
